ஓபிசியில் 4 வகை உள்ஒதுக்கீடு வழங்க திட்டம்!?

 

ஓபிசியில் 4 வகை உள்ஒதுக்கீடு வழங்க திட்டம்!?

ஓபிசி பிரிவில் 4 வகையான உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிசியில் 4 வகை உள்ஒதுக்கீடு வழங்க திட்டம்!?

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 30 ஆண்டுகளும், கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிறது.ஆனால் இதன் பயன்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்று சேருவதில்லை என்ற புகாரை பலரும் முன்வைத்தனர். இதுகுறித்து ஆய்வு செய்ய நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது.

ஓபிசியில் 4 வகை உள்ஒதுக்கீடு வழங்க திட்டம்!?

இந்நிலையில் ஓபிசியை 4 பிரிவுகளாக பிரித்து 2,6,9,10 சதவீதங்களில் உள் ஒதுக்கீடு வழங்க ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு எனப்படும் ஓபிசி பிரிவுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மொத்தம் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2,633 ஓபிசி பிரிவுகளுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஓபிசி பிரிவில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பலனடைவதாக புகார் எழுந்ததால் பரிந்துரை செய்யப்படவுள்ளது.