ஐ.பி.எல் போட்டிகளை யு.ஏ.இ-ல் நடத்த திட்டம் – பி.சி.சி.ஐ கூட்டத்தில் முடிவு?

 

ஐ.பி.எல் போட்டிகளை யு.ஏ.இ-ல் நடத்த திட்டம் – பி.சி.சி.ஐ கூட்டத்தில் முடிவு?

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்துவது குறித்து ஆய்வு நடத்துவது என்று நான்கு மணி நேர பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வழக்கமாக ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மே மாதம் முடிவடையும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனாத் தொற்று அதிகமாக உள்ள நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், எப்படியாவது போட்டியை நடத்திவிடுவது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது.

ஐ.பி.எல் போட்டிகளை யு.ஏ.இ-ல் நடத்த திட்டம் – பி.சி.சி.ஐ கூட்டத்தில் முடிவு?
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் மும்பையில் நேற்று கூடியது. இதில் தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நான்கு மணி நேரம் இந்த கூட்டம் நீடித்தது. கூட்டத்தில் ஐ.பி.எல் போட்டியை நடத்த வேண்டும், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது குறித்து ஆய்வு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஐ.பி.எல் போட்டி தொடர்பாக எந்த ஒரு இறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா தீவிரமாக உள்ள நிலையில் இன்னும் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிது.

ஐ.பி.எல் போட்டிகளை யு.ஏ.இ-ல் நடத்த திட்டம் – பி.சி.சி.ஐ கூட்டத்தில் முடிவு?
மேலும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பையை அக்டோபர் – நவம்பரில் நடத்துவது என்று முடிவு செய்துள்ள நிலையில் இந்திய அணிக்கான பயிற்சிக் களம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் பெங்களூரு நகரத்தில் கொரோனாத் தொற்று தீவிரமாக பரவி வருவதால் அங்கு பயிற்சி முகாம் நடத்துவது சரியாக இருக்காது. அதனால், அகமதாபாத்தில் முகாம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தர்மசாலாவில் பயிற்சி முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அங்கு வீரர்கள் தங்குமிடத்தில் பிரச்னை வரலாம் என்பதால் தர்மசாலாவில் பயிற்சி நடத்தும் திட்டம் கைவிடப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.