Home ஆன்மிகம் குரு தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலங்கள்!

குரு தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலங்கள்!

தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது ஆறுமுகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது.தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

குழந்தை வரம் தரும் ஆழ்வார் திருநகரி குரு!

தாமிரபரணிக்கரை குரு ஸ்தலங்கள் நவக்கிரகங்களில் குருபகவானை ‘புத்திர காரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறும், புத்திர உற்பத்திக்குக் காரண கர்த்தா இவரே. குருபகவானின் அனுக்கிரகம் பெற்ற தலங்களில் தரிசனம் செய்து, தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்யலாம்.

நவதிருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி குருவிற்குரிய (வியாழன்) ஸ்தலமாகும். இந்த ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் அவதரித்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

தோஷத்தைப் போக்கும் தாமிரபரணி குரு! .

தூத்துக்குடி தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான இந்த ஸ்தலம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது. இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். தாமிரபரணியில் நீராடி குருபகவானை வணங்க தோஷங்கள் நீங்கும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.

இந்த கோயில்கள் மட்டுமல்ல சிவ ஆலயங்களில் உள்ள நவகிரக குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெல்லும் மந்திரம்!

நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்க பலரும் பல முயற்சிகளை செய்கின்றனர். நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை ஓரளவுக்கு எதிர்கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது. நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும்...

கோழி மருந்தை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை மதுரை அருகே கோழி மருந்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி...

பாஜக பொங்கல் விழா வாக்குக்காக நடத்தவில்லை- அண்ணாமலை

கோவையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்ம ஊர் பொங்கல்...

முதல்நாளில் 1,65,714 பேருக்கு தடுப்பூசி- மத்திய சுகாதாரத்துறை

கொரோனாவுக்கு எதிரான உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். கோவிஷீல்ட், கோவாக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள யாரும் வற்புறுத்தப்பட மாட்டார்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!