கட்சிக்குள் குரூப் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்துங்க…. காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்

 

கட்சிக்குள் குரூப் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்துங்க…. காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்

கட்சிக்குள் குரூப் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்துங்க. 2021ம் ஆண்டில் நடைபெற உள்ள கேரள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று கேரள காங்கிரஸ் பிரிவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. அந்த தேர்தலில் நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் 2வது இடத்தை பிடித்தது. அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்தத காங்கிரசுக்கு உள்ளாட்சி தேர்தல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அந்த கட்சிக்குள் அதிருப்தி தலை தூக்கியது.

கட்சிக்குள் குரூப் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்துங்க…. காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்
உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தற்கு கட்சியினர் குரூப் அரசியலில் ஈடுப்பட்டதே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கேரள காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.ஜே. ஜோசப் இது தொடர்பாக கூறியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் 19ல் ஐக்கிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில், ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் குழு பணி இல்லை.

கட்சிக்குள் குரூப் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்துங்க…. காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்
பி.ஜே. ஜோசப்

குறிப்பாக குரூப் அரசியல் உள்ளாட்சி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. உம்மன் சாண்டி மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காங்கிரசுக்குள் கூட்டு தலைமை இருக்க வெண்டும். கேரள காங்கிரசுக்குள் உள்ள குரூப் அரசியலை நிறுத்த மத்திய தலைமை தலையிட வேண்டும். காங்கிரசுக்குள் உள்ள அனைத்து அணிகளும் இணைந்து பணியாற்றினால் அடுத்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.