• April
    07
    Tuesday

Main Area

Main



மகளை இழந்த பீட்சா டெலிவரி பாய்...எதிர்பாராமல் கட்டியணைத்த குழந்தை: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!

அமெரிக்கா
அமெரிக்கா


அமெரிக்காவின் ரோட் தீவில் கிரான்ஸ்டன் நகரத்தில் லிண்ட்சே ஷீலி என்பவர் தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கோஹன் என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் லிண்ட்சே கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்சா ஆர்டர்  செய்துள்ளார். அப்போது அதை கொடுக்க வந்த நபரை 2 வயது குழந்தையான கோஹன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றுள்ளான்.  இந்த நிகழ்வு அவர்கள்  வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.

ttn

இதை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட  லிண்ட்சே ஷீலி, 'மிகவும் இனிமையான மற்றும் வேடிக்கையான விஷயம் இது என நாங்கள் நினைத்தோம். இந்த வீடியோ உங்களுக்கு சிரிப்பைத் தரும் என நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியில்  இருந்த பீட்சா ஆர்டர் செய்யும் நபரான  ரியானின் கவனத்திற்கு இந்த வீடியோ சென்றுள்ளது. அப்போது தான் தனது வாழ்க்கையில்  தனக்கு நடந்த துயரத்தை ரியான் லிண்ட்சே ஷீலியிடம்  தெரிவித்துள்ளார். 

அதை மீண்டும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட குழந்தையின் தந்தை லிண்ட்சே ஷீலி, ரியான் சமீபத்தில் தன்னுடைய மகளை இழந்துள்ளார். கோஹன் அணைப்பு கடவுள் கொடுத்த ஆசீர்வாதமாக அவர் நினைக்கிறார்.  கோஹனை வெளியில் செல்ல நான் அனுமதிக்க மறுத்திருந்தால், இந்த உணர்வுப்பூர்வமான தருணத்தை நாங்கள் இழந்திருப்போம். இது ரியானுக்கு  மட்டுமல்ல, எங்களுக்கும் உன்னதமான தருணம்  கூறியுள்ளார். 

tn

'என் மகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் போது மிகவும் சரியான நேரத்தில் சிறுவன் என்னை அணைத்துள்ளான். என்னுடைய மகள் பிரபஞ்சத்திலிருந்து எனக்கு அனுப்பியது போல இருந்தது' என்று  ரியான் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.