இடதுசாரிகள், மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளதால் போராட்டம் இனி விவசாயிகளின் போராட்டமாக இருக்காது .. பா.ஜ.க.

இடதுசாரிகள், மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளதால் போராட்டம் இனி விவசாயிகளின் போராட்டமாக இருக்காது .. பா.ஜ.க.

இடதுசாரிகள், மாவோயிஸ்டுகள் போன்ற சமூக விரோத சக்திகள் விவசாயிகளின் போராட்டத்தில் ஊடுருவியுள்ளதால் இனி விவசாயிகளின் எதிர்ப்பு விவசாயிகளின் போராட்டமாக இருக்காது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

பிக்கி அமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய வர்த்தக, தொழில் துறை மற்றும் உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: விவசாயிகளின் எதிர்ப்பு என்று அழைக்கப்படுவது விவசாயிகளின் போராட்டமாகவே இல்லை என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

இடதுசாரிகள், மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளதால் போராட்டம் இனி விவசாயிகளின் போராட்டமாக இருக்காது .. பா.ஜ.க.
பியூஸ் கோயல்

இடதுசாரிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் போன்ற சமூக விரோத சக்திகள் அந்த போராட்டத்தில் ஊடுருவியுள்ளனர். கடந்த 2 தினங்களாக அங்கு தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் தேச விரோதிகளை விடுவிக்கக்கோரி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு புறம்பான கோரிக்கை எழுந்ததை நாம் பார்த்தோம்.

இடதுசாரிகள், மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளதால் போராட்டம் இனி விவசாயிகளின் போராட்டமாக இருக்காது .. பா.ஜ.க.
மாவோயிஸ்டுகள்

அறிவாளிகள் மற்றும் கவிஞர்கள் என்று அழைக்கப்படுவர்களை விடுப்பதற்கு விவசாயிகளின் மேடையில் எழுப்பப்படும் கோரிக்கைகள், வேளாண் சட்ட முன்னேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சி இந்தியாவுக்கு எதிரான சில சக்திகளின் கைகளில் இருக்கலாம் என்பதை தெளிவாக உறுதி செய்கிறது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி செலவை விட 50 சதவீதம் பெறுவதை உறுதி செய்த அரசாங்கம் இது. இந்த அரசாங்கம் வேளாண் பட்ஜெட்டை 6 மடங்கு உயர்த்தியுள்ளது. வேளாண் துறையில் ரூ.1.34 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.