மோடியின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்.. பியூஸ் கோயல்

மோடியின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்.. பியூஸ் கோயல்

பிரதமர் மோடியின் கடந்த 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

பியூஸ் கோயல் டிவிட்டரில், பிரதமர் மோடி ஜி தலைமையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பல சாதனை மைல்கற்களை ரயில்வே எட்டியுள்ளது. 2014-20 வரையிலான 6 ஆண்டுகளில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது 2008-14ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் 371 சதவீதம் அதிகமாகும். 2008-14 வரையிலான காலத்தில் 3,835 கி.மீட்டர் தொலைவுக்கு மட்டுமே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு இருந்தது.

மோடியின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்.. பியூஸ் கோயல்
பியூஸ் கோயல்

மத்திய அரசு 2019 முதல் 2024ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில் 28,143 கி.மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதைகளை மின்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இதில் 2020 அக்டோபர் வரை 5,642 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது பதிவு செய்து இருந்தார். முன்னதாக ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திகாவாரா ரயில் நிலையத்தில், வடமேற்கு ரயில்வேயின் கீழ் வரும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா-பாண்டிகுய் ரயில் வழித்தடத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

மோடியின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்.. பியூஸ் கோயல்
மண் கப்பில் தேநீர்

இந்த நிகழ்ச்சியில் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியல் பியூஸ் கோயல் பேசுகையில் கூறியதாவது:
இன்று சுமார் 400 ரயில் நிலையங்களில் குல்ஹாட்ஸில் (மண் கப்புகள்) விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண் கப்புகளில் மட்டுமே டீ விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இது பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். மண் கப்புகள் சுற்றுசூழலை காப்பாற்றுகின்றன என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.