• August
    20
    Tuesday

Main Area

Main



இந்திய விமான படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது.....

அபிநந்தன்
அபிநந்தன்
Loading...

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோத செய்து வெடிக்க செய்தான். இதில் 45 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக அந்த மாதம் 26ம் தேதி இந்திய விமான படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது.

பாக். பிடியில் அபிநந்தன் (கோப்பு படம்)

இந்த தாக்குதலில் அந்த முகாமில் இருந்த 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் அதற்கு அடுத்த நாளில் இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. இதனை உடனே அறிந்த இந்திய விமான படை போர் விமானங்கள் அவற்றை வழிமறித்து விரட்டி அடித்தன. மேலும், பாகிஸ்தானின் ஒரு போர் விமானத்தை இந்திய விமான படை பைலட் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். 

வீர் சக்ரா விருது

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய பிறகு இந்திய எல்லைக்குள் திரும்பும்போது அந்த விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அந்த விமானத்திலிருந்து அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறை பிடித்தனர். இதனையடுத்து மத்திய அரசு பாகிஸ்தானுடன் பேசி அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் அபிநந்தன் இருந்தபோது, அவர்களிடம் தைரியமாக பேசியதை இந்திய மக்கள் அனைவரும் பாராட்டினர். 

இந்நிலையில், இந்திய விமான படை பைலட் அபிநந்தனின் வீரத்தை பாராட்டும் வகையில், நாளை டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் அவருக்கு வீர் சக்ரா விருதை மத்திய அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.