darbar
  • January
    27
    Monday

Main Area

Main



பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: வருகிறது 'அம்மா பேட்ரோல்'!

அம்மா பேட்ரோல்
அம்மா பேட்ரோல்

சென்னை:  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக, அம்மா பேட்ரோல் என்ற பெயரில், புதிய ரோந்து வாகனம் அறிமுகமாகவுள்ளது. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மகளிர் காவல் நிலையங்கள் , தடுக்க தனிபிரிப்பவு என அனைத்தும் உள்ள நிலையிலும் தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. 

 

அதை தடுக்கும் முயற்சியில் அ ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசு இணைந்து இந்த பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு என பிரத்யேகமாக பிங்க் நிற ரோந்து வாகனத்தை உருவாக்கியுள்ளனர். அம்மா பேட்ரோல் என்ற பெயரில் செயல்படவுள்ள இதன் சேவை எண்  1098, மற்றும்  1091 ஆகும். 

 

முதற்கட்டமாக,  பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில்  காவல் நிலையங்களுக்கு 35 ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட உள்ளன.  இதை அடுத்த வாரம்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கவைக்கவுள்ளார். குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும் , அதேபோன்று வயதானவர்களுக்கும் உதவவும் இந்த ரோந்து வாகனம் பயன்பட உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்  வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த சேவை கேரளாவில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.