மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்பதை மத்திய அரசு சொல்ல தயாராக இல்லை.. பினராயி விஜயன்

 

மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்பதை மத்திய அரசு சொல்ல தயாராக இல்லை.. பினராயி விஜயன்

இன்று வரை, வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்பதை மத்திய அரசு மக்களிடம் தெரிவிக்க தயாராக இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள சட்டப்பேரவையில் கோடகரா கருப்பு பணம் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்துக்கு பதிலளிக்கும்போது அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கோடகரா கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.க. தலைவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 2016 நவம்பர் 8ம் தேதியன்று பணமதிப்பிழப்பு (பழைய 500,1,000 ரூபாய் செல்லாது) அமல்படுத்தப்பட்டது. போலி ரூபாய் நோட்டுக்களை தடுப்பதற்கான ஒரு நடவடிக்கை இது என்று மக்களிடம் மத்திய அரசு தெரிவித்தது. கருப்பு பணத்தை தடுக்க இது உதவும் என்று அந்த நேரத்தில் மத்திய அரசு கூறியது.

மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்பதை மத்திய அரசு சொல்ல தயாராக இல்லை.. பினராயி விஜயன்
பணமதிப்பிழப்பு

அமைப்புசாரா துறை மற்றும் சாமானிய மனிதனுக்கு பெரிய பேரிழப்பு ஏற்பட்டதை தவிர, பணமதிப்பிழப்பு நடவடிக்கை வாயிலாக வேறு என்ன சாதிக்கப்பட்டது என்பதை நாம் ஆய்வு செய்வது அவசியம். 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கண்டுபிடித்து நாட்டுக்கு திரும்ப கொண்டு வரப்படும் என்றும் சாமானிய மக்களுக்கு தலா ரூ.15 லட்சம் கிடைக்கும் என்றும் பா.ஜ.க. சொல்லியது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்பு பணம் இந்தியா கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி கொடுத்தது.

மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்பதை மத்திய அரசு சொல்ல தயாராக இல்லை.. பினராயி விஜயன்
பா.ஜ.க.

இன்றைய தேதி வரை, வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்பதை மத்திய அரசு மக்களிடம் தெரிவிக்க தயாராக இல்லை. மீட்கப்பட்ட கருப்பு பணத்தில் யாராவது ஒருவர் ஒரு பைசாவாது பெற்றதாக தெரியவில்லை. 2011ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் நாட்டில் கருப்பு பணம் அளவு குறித்து மதிப்பீடு மற்றும் ஆலோசனை வழங்க 3 முகமைகளுக்கு பணி வழங்கப்பட்டது. அந்த அமைப்புகள் வழங்கிய அறிக்கைகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.