பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.307 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

 

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.307 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

2021 மார்ச் காலாண்டில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.307.44 கோடி ஈட்டியுள்ளது.

பெவிகால் தயாரிப்பு நிறுவனமான பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.307.44 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 96.43 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லாபமாக ரூ.156.51 கோடி ஈட்டியிருந்தது.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.307 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்

2021 மார்ச் காலாண்டில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2,235.52 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 44.72 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,544.68 கோடி ஈட்டியிருந்தது.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.307 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் தயாரிப்புகள்

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2021 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.51 சதவீதம் உயர்ந்து ரூ.1,888.50ஆக அதிகரித்தது.