மருத்துவ வசதி கிடைக்காததால் சகோதரர் கொரோனாவால் இறந்துவிட்டார்: நடிகை பியா

 

மருத்துவ வசதி கிடைக்காததால் சகோதரர் கொரோனாவால் இறந்துவிட்டார்: நடிகை பியா

கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை பியாவின் சகோதரர் மரணமடைந்தார்.

பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். இதனைதொடர்ந்து கோவா, கோ போன்ற படங்களில நடித்து பிரபலமானார்.

மருத்துவ வசதி கிடைக்காததால் சகோதரர் கொரோனாவால் இறந்துவிட்டார்: நடிகை பியா

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு இன்று காலை முதல் நடிகை பியா ட்விட்டரில் உதவி கேட்டுவந்தார். அதில், “உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் நகரில் தனது சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் தேவை, தயவு செய்து உதவுங்கள்” எனக் கூறியிருந்தார்.

மருத்துவ வசதி கிடைக்காததால் சகோதரர் கொரோனாவால் இறந்துவிட்டார்: நடிகை பியா

ஆனால் அவருக்கு உதவி எதுவும் கிடைக்காத நிலையில், கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனை பியா தனது ட்விட்டர் வாயிலாக தெரிவுப்படுத்தியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.