விரும்பும் இடத்தில் விராட் கோலியுடன் புகைப்படம்!

 

விரும்பும் இடத்தில் விராட் கோலியுடன் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியுடன் விரும்பும் இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் ஆக்குமெண்ட் ரியாலிட்டி படம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரும்பும் இடத்தில் விராட் கோலியுடன் புகைப்படம்!

இதன் மூலம் விராட் கோலியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர முடியும்.இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணம் செல்வதற்கு ஏற்ப இந்த புதிய விராட் கோலி படம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. “பேட் டாக் பார் இந்தியா” என்கிற தலைப்பில் இந்த இமேஜை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த முடியும்.

விரும்பும் இடத்தில் விராட் கோலியுடன் புகைப்படம்!

விராட் கோலியின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த இப்படத்தினை ரசிகர்கள் தங்கள் விரும்பும், இடங்களில் அவர் இருப்பதுபோல் புகைப்படமாக மாற்றிக் கொள்ளலாம். இந்திய கிரிக்கெட் அணி, 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு விளையாட செல்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது – இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. விராட்கோலி பக்கத்திற்குச் சென்று, இன்ஸ்டா கேமராவை கிளிக் செய்தால், போட்டோ எடுப்பது போல விராட்கோலி இமேஜ் நாம் விரும்பும் இடத்தில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.