மத்திய அமைச்சர்களின் போன் கால்கள் ஹேக்? – வெளிவந்த அதிரவைக்கும் தகவல்கள்!

 

மத்திய அமைச்சர்களின் போன் கால்கள் ஹேக்? – வெளிவந்த அதிரவைக்கும் தகவல்கள்!

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசஸ் ஸ்பைவேர் (pegasus spyware) செயலி மிகவும் அபாயகரமானது. ஏனென்றால் பிரபலமான ஆட்களின் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைந்து உளவு பார்க்கும் செயலி. இஸ்ரேலை சேர்ந்த பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ. 2019ஆம் ஆண்டு இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியது. இது முழுக்க முழுக்க உளவுப் பணிகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி. இதனுடைய சிறப்பம்சமே அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்கும் ஆப்பிள் போன்களுக்குள்ளேயே ஊடுருவி தகவல்களைத் திருடக் கூடிய திறன் கொண்டது.

மத்திய அமைச்சர்களின் போன் கால்கள் ஹேக்? – வெளிவந்த அதிரவைக்கும் தகவல்கள்!

இந்தச் செயலி ஆரம்பத்தில் அரசு மட்டுமே உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தும் என்ற சொல்லப்பட்ட நிலையில், தனிப்பட்ட பிரபல நபர்கள் கூட இந்தச் செயலியைப் பயன்படுத்தி உளவு பார்த்துவந்த தகவல் வெளியாகி அதிரவைத்தது. தங்களின் தரவுகள் திருடப்படுவதாகக் கூறி வாட்ஸ்அப் நிறுவனம் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்ததே அதற்கு சாட்சி. அரசின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், உரிமைப் போராளிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பிரபலமான அரசியல் தலைவர்களின் போன் கால்களை ஒட்டுக் கேட்கவும், அவர்களிடம் இருக்கும் முக்கிய ஆவணங்களை அவர்களுக்கே தெரியாமல் கைப்பற்றவும் இச்செயலியைப் பயன்படுத்துகிறார்கள்.

மத்திய அமைச்சர்களின் போன் கால்கள் ஹேக்? – வெளிவந்த அதிரவைக்கும் தகவல்கள்!

கொரோனா பரவலால் கொஞ்சம் நாளாக அமைதியாக இருந்த இவ்விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆம் தற்போது இந்தியாவில் இப்புகார் எழுந்திருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு அமெரிக்காவின் வாஷிங்க்டன் போஸ்ட், லண்டன் கார்டியன் உள்ளிட்ட சர்வதேச பத்திரிகைகள், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோரின் போன் கால்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக முக்கியமான தகவல்களை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலை பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அவரின் ட்வீட்டில், “இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் உரையாடல்களை பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நேரப்படி இன்று மாலை வாஷிங்டன் போஸ்ட் & லண்டன் கார்டியன் பத்திரிகைகள் ஒரு அறிக்கையை வெளியிட இருப்பதாக வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்த பட்டியலை நான் வெளியிடுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.