Home தமிழகம் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

சிவசங்கர் பாபா நடத்திவந்த சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து முன்னாள் மாணவிகள் புகார் அளிக்க தொடங்கிய நிலையில் அதற்கான புகைப்பட ஆதாரங்கள் ,பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

இது குறித்து விசாரணை செய்ய தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபா அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது போர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் சிவசங்கர் பாபா கைது செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி கை வசம் மாறியது. சிவசங்கர் பாபாவை தீவிரமாக தேடி வந்த சிபிசிஐடி போலீசார் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அங்கு விரைந்தனர். ஆனால் அங்கிருந்து சிவசங்கர் பாபா தப்பிய நிலையில் அவரை டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர் . இதைத் தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்டவர் செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.டேராடூனில் நெஞ்சுவலி காரணமாக அவருக்கு ஆஞ்சியோ செய்ததை சிபிசிஐடி போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே உடல்நலக்குறைவால் சிவசங்கர் பாபா சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

இந்நிலையில் சுஷில் ஹரி பள்ளியில் சிவசங்கர் பாபா மீதான புகார்களை சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறைக்கு போன் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறைக்கு 28512500 / 28512570 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி யிலும் புகார் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது. முன்னதாக சிவசங்கர் பாபாவின் மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுக்க சிவசங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடபட்டிருந்ததால் மருத்துவ அறிக்கை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“நம்ம ஆட்டம் எப்போவும் வெறித்தனமா இருக்கும்” – இஸ்ரேல் வீராங்கனையை புரட்டியெடுத்த பி.வி. சிந்து!

எந்தவொரு விளையாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளாலும் இருந்தாலும் சரி சோதனைகளைத் தாண்டி சாதனைகளைப் பெறும்போது தான் நம்முடைய புருவத்தை விரிய வைப்பார்கள். இவர்களையா நாம் இவ்வளவு நாளும் கவனிக்காமல் விட்டோம்...

“என்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை…” – வாசலில் காதலியால் நேர்ந்த விபரீதம்

காதலனின் திருமணத்தை நிறுத்த சென்ற காதலியை அடித்து உதைத்து சாலையில் வீசிய சம்பவம் நடந்துள்ளதுடெல்லியின் மகிபல்பூர் பகுதியில் வசிக்கும் 22 வயது பெண்ணொருவர் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்...

நண்பரின் தோட்டத்தில் 1455 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த பாஜக நிர்வாகி பிரகாஷ் கைது

தமிழ்நாட்டில் அடுத்த 2 மாதத்திற்குள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலுமாக ஒழித்து அதன் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில்.. குன்னூர் பெண்மணியை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அதன் படி, இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று...
- Advertisment -
TopTamilNews