Home உலகம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது – பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது – பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.

மணிலா: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பிலிப்பைன்ஸில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்று அந்நாட்டு மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று பெரும்பாலான வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

schools

ஆகஸ்ட் மாத இறுதியில் ஆன்லைன் அல்லது தொலைக்காட்சி வகுப்புகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இணைய அணுகல் இல்லாத ஏழ்மையான அல்லது தொலைதூர சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியை தவற விடும் அபாயம் அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் நேற்று 579 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 22,474-ஆக அதிகரித்துள்ளன. இதுவரை அந்நாட்டில் 1,011 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Most Popular

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அரசு வெற்றி.. காங்கிரஸ் ஏமாற்றம்

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க....

வாக்களிக்கும்போது கைகளை சுத்தப்படுத்துங்க என மக்களிடம் காங்கிரஸை மறைமுகமாக கிண்டல் அடித்த சவுகான்

வாக்களிக்கும்போது கைகளை சுத்தப்படுத்துங்க என்று காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கிண்டல் அடித்தார். மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவை...

பா.ஜ.க.வுக்கு குட்பை சொன்ன சிரோன்மணி அகாலி தளம்.. தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்தது..

வேளாண் மசோதா தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன்மணி அகாலி தளம் நேற்று அறிவித்தது நாடாளுமன்ற மக்களவை...

19 வயதுக்கு பெண்ணுக்கு கொடூரம்… உத்தர பிரதேச அரசு என்ன செய்ய போகிறது? யோகியை சாடிய பகுஜன் சமாஜ்

உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிருக்காக போராடி கொண்டு இருப்பதை குறிப்பிட்டு அரசு என்ன செய்யப்போகிறது என யோகி ஆதித்யநாத் அரசை பகுஜன் சமாஜ்...
Do NOT follow this link or you will be banned from the site!