அமெரிக்காவில் 3-ம் கட்ட பரிசோதனை – இது ஆக்ஸ்போர்ட்டு கொரோனா தடுப்பூசி

 

அமெரிக்காவில் 3-ம் கட்ட பரிசோதனை – இது ஆக்ஸ்போர்ட்டு கொரோனா தடுப்பூசி

உலகளவில் கொரோனா தடுப்பூசி உடனே தேவைப்படும் நாடு அமெரிக்காதான். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, உலகளவில் அதிக கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்கள் வசிப்பது அமெரிக்காவில்தான். இரண்டு, சரியாக இன்னும் இருமாதங்களில் அங்கு தேர்தல் நடக்க விருக்கிறது. கொரோனா நடவடிக்கைகள் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.  

ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்து, அதைப் பதிவும் செய்துவிட்டது. அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 3-ம் கட்ட பரிசோதனை – இது ஆக்ஸ்போர்ட்டு கொரோனா தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளில் முனைப்போடு செயல்படுகிறது. அது கண்டறிந்த மருந்திற்கு AZD1222 பெயரிட்டுள்ளது.

இந்த மருந்து இரண்டு கட்ட பரிசோதனைகளை முடித்து, மூன்றாம் மற்றும் இறுதிகட்ட பரிசோதனையைச் செய்யவிருக்கிறது. இதற்காக, அமெரிக்காவின் 80 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. அவற்றின் மூலம் சுமார் 30,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

அமெரிக்காவில் 3-ம் கட்ட பரிசோதனை – இது ஆக்ஸ்போர்ட்டு கொரோனா தடுப்பூசி

பொதுவாக தடுப்பூசிக் கண்டுபிடிக்க நீண்டகாலம் பிடிக்கும். பல கட்ட ஆய்வுக்குப் பிறகே நடைமுறைக்கு அது கொண்டுவரப்படும். நவம்பர் மாத தேர்தல் தேதிக்கு முன் எப்படியாவது கொரோனா தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிரமாக உள்ளார்.

ஏனெனில், கொரோனாவை அவர் கையாண்ட விதம் குறித்து கடுமையான விமர்சனம் அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகளவிலும் கூறப்படுகிறது. அவையெல்லாம் மீண்டும் அவர் அதிபராவதைத் தடுத்து விடுமோ என்று கவலைபடுகிறார்.