பீகாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

பீகாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் தொடங்கியது.

பீகாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2ஆம் கட்ட தேர்தல் இன்றும் , மூன்றாவது கட்ட தேர்தல் நவ.7 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

பீகாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்நிலையில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் சுமார் 2.85 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 2ம் கட்ட வாக்குப்பதிவில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பீகாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

கொரோனாவால் ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கை 1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டோர், கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு, மாற்று நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஐக்கிய ஜனதா தளம் -பாஜக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.