பெட்ரோநெட் எல்.என்.ஜி. லாபம் ரூ.520 கோடியாக குறைந்தது.. ஒரு பங்கு சம்பாத்யமும் வீழ்ச்சி..

பெட்ரோநெட் எல்.என்.ஜி. லாபம் ரூ.520 கோடியாக குறைந்தது.. ஒரு பங்கு சம்பாத்யமும் வீழ்ச்சி..

பெட்ரோலிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் 7.15 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.520.23 கோடியாக சரிவடைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.560.27 கோடியாக உயர்ந்து இருந்தது.

பெட்ரோநெட் எல்.என்.ஜி. லாபம் ரூ.520 கோடியாக குறைந்தது.. ஒரு பங்கு சம்பாத்யமும் வீழ்ச்சி..

2020 ஜூன் காலாண்டில் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.4,883.57 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.8,613.44 கோடியாக உயர்ந்து இருந்தது. ஆக, கடந்த காலாண்டில் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனத்தின் நிகர வருவாய் 43.3 சதவீதம் குறைந்துள்ளது.

பெட்ரோநெட் எல்.என்.ஜி. லாபம் ரூ.520 கோடியாக குறைந்தது.. ஒரு பங்கு சம்பாத்யமும் வீழ்ச்சி..

2020 ஜூன் காலாண்டில் பெட்ரோநெட் எல்.என்.ஜி.யின் ஒரு பங்கு சம்பாத்யம் ரூ.3.47ஆக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் பெட்ரோநெட் எல்.என்.ஜி.யின் ஒரு பங்கு சம்பாத்யம் ரூ.3.74ஆக உயர்ந்து இருந்தது.