ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது : பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு!

ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது : பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து  மருத்துவக் நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது : பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு!

அதனையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதே போல தற்போது இருக்கும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு முறை தொடரும் என்றும் தற்போது இருக்கும் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அறிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது : பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு!
இந்நிலையில் அரசின் உத்தரவின்படி ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. கடலூரில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் முரளி, ‘நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.