”சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்”… பெட்ரோல் மீதான வரி குறைப்பு – அரசாணை வெளியீடு

 

”சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்”… பெட்ரோல் மீதான வரி குறைப்பு – அரசாணை வெளியீடு

ஆரம்பம் முதலே பெட்ரோல் விலையுயர்வை திமுக கடுமையாக விமர்சித்துவருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தியது. தேர்தல் வாக்குறுதியாக, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என வாக்கு கொடுத்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக தொடர்ந்து விமர்சித்து போராட்டமும் நடத்தியது. இதனிடையே நடப்பு நிதியாண்டில் முதல் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். காகிதமில்லா அந்த இ பட்ஜெட்டில், பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியானது லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

”சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்”… பெட்ரோல் மீதான வரி குறைப்பு – அரசாணை வெளியீடு

இந்நிலையில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை குறைத்ததற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இதனையடுத்து வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டீலர்கள் விற்பனையாளர்கள் வரி குறைக்கப்பட்டதற்கு ஏற்ப பொதுமக்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.