8 நாட்களுக்கு பிறகு குறைந்தது பெட்ரோல் விலை… எவ்வளவு தெரியுமா?

 

8 நாட்களுக்கு பிறகு குறைந்தது பெட்ரோல் விலை… எவ்வளவு தெரியுமா?

சென்னையில் பெட்ரோல் விலை 8 நாட்களுக்கு பிறகு 15 காசுகள் குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு சில மாதங்களிலேயே பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது. டீசல் விலையும் 100 ரூபாயை எட்டியதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்தனர். அத்திவாசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டது.

8 நாட்களுக்கு பிறகு குறைந்தது பெட்ரோல் விலை… எவ்வளவு தெரியுமா?

இத்தகைய சூழலில் தமிழக அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை கடந்த 13ம் தேதி சட்டப்பேரவையில் திமுக அரசு நிறைவேற்றியது. அன்றைய தினமே பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் 8 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ. 99.32க்கு விற்பனையாகிறது. அதன் படி, டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.93.66க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47க்கும், டீசல் ரூ.93.84க்கும் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.