சென்னையில் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 

சென்னையில் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை எட்டியதைத் தொடர்ந்து தமிழகத்திலும் 100 ரூபாயை எட்டிவிட்டது.

சென்னையில் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

இதை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெட்ரோல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வராத மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, நேற்று தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெட்ரோல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வரும் அதே வேளையில், சமையல் கேஸ் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.101.06 க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.94.06க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.