பல மாவட்டங்களில் ரூ.100ஐ எட்டியது பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 

பல மாவட்டங்களில் ரூ.100ஐ எட்டியது பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினம்தோறும் மாற்றி அமைக்கின்றன. கடந்த ஆண்டு பொது முடக்கக் காலத்தின்போது கச்சா எண்ணெய் விலை சரிந்தது. அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. மாறாக நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே இருந்தது.

பல மாவட்டங்களில் ரூ.100ஐ எட்டியது பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

குறிப்பாக, கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை எட்டியிருக்கும் நிலையில் தமிழகத்திலும் 100 ரூபாயை கடந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தான் பெட்ரோல், டீசல் விலை உயருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.19 க்கும் டீசல் 93.23 காசுக்கும் விற்பனையாகிறது. பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியிருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.