தமிழகத்திலும் ரூ.100ஐ எட்டிய பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 

தமிழகத்திலும் ரூ.100ஐ எட்டிய பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நாடு முழுவதும் கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல் டீசல், விலை தொடர்ச்சியாக ஏற்றத்தை சந்தித்து வருகிறது. உலகமெங்கும் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை குறைந்திருப்பதால் அவற்றின் விலையை உற்பத்தி நாடுகள் ஏற்றுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகின்றன.

தமிழகத்திலும் ரூ.100ஐ எட்டிய பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

மே மாதம் முதல் தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் விலை பல மாநிலங்களில் ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்து விட்டது. டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்குகிறது. ஊரடங்கால் மக்கள் தவித்து கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் படுவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்திலும் ரூ.100ஐ எட்டிய பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

இந்த நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து இருப்பது வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி மக்கள் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அங்கு 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.4 க்கும் டீசல் ரூ. 93.92க்கும் விற்பனை செய்யப்படுகிறது.