சென்னையை தவிர 31 மாவட்டங்களில் செஞ்சூரி அடித்த பெட்ரோல் விலை!

 

சென்னையை தவிர 31 மாவட்டங்களில் செஞ்சூரி அடித்த பெட்ரோல் விலை!

கொரோனாவுக்கு அடுத்தப்படியாக நாட்டின் தலையாய பிரச்சினையாக பெட்ரோ, டீசல் விலை உயர்வு உருவெடுத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு போடப்பட்டும் ஏன் இந்தளவிற்கு விலை ஏறிக்கொண்டிருக்கிறது என தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கூட இவ்வாறு விலையேறிக் கொண்டிருப்பது மத்திய அரசின் மீது மக்களைக் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. விலையேற்றத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன.

சென்னையை தவிர 31 மாவட்டங்களில் செஞ்சூரி அடித்த பெட்ரோல் விலை!

இதற்கு விளக்கம் கொடுக்கும் மத்திய அரசு சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றம் செய்வதாகவும், டிமாண்ட் செய்வதாகவும் கூறுகிறது. ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரி குறித்து மட்டும் வாய் திறப்பதில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தால் வரியைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதற்குத் தானே அரசு என எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். மத்திய அரசு ஒருபுறமென்றால் மாநில அரசு தன் பங்கிற்கு வரி விதிக்கிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக அரசு.

சென்னையை தவிர 31 மாவட்டங்களில் செஞ்சூரி அடித்த பெட்ரோல் விலை!

அதிமுகவால் கஜானா காலியாகிவிட்டதால் வரியை குறைக்க முடியாத கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பிடிஆர் கூறுகிறார். ஆனால் மாநிலத்தில் பொருளாதாரம் சீரான பின்பு நிச்சயம் குறைப்போம் என்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் இன்று தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர்த்து 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை செஞ்சூரி அடித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 25 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.