லாக்டவுன் தளர்வால் மீண்டும் சூடுபிடித்த பெட்ரோல், டீசல் விற்பனை….

 

லாக்டவுன் தளர்வால் மீண்டும் சூடுபிடித்த பெட்ரோல், டீசல் விற்பனை….

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பல கட்டங்களாக செயல்படுத்தி வருகிறது. முதல் 3 கட்ட (மார்ச் 25 முதல் மே 3 வரை) லாக்டவுன் காலத்தில் பஸ், ரயில் மற்றும் விமானம் என அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டது. மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

லாக்டவுன் தளர்வால் மீண்டும் சூடுபிடித்த பெட்ரோல், டீசல் விற்பனை….

இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மிகவும் குறைந்தது. இந்த நிலையில் மே 4 முதல் லாக்டவுன் விதிமுறைகள் சிறிது தளர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. மாநில எரிபொருள் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தற்காலிக தரவின்படி, கடந்த மே மாதத்தில் பெட்ரோல் முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 83 சதவீதம் அதிகரித்து 16 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. டீசல் விற்பனை 69 சதவீதம் அதிகரித்து 48 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

லாக்டவுன் தளர்வால் மீண்டும் சூடுபிடித்த பெட்ரோல், டீசல் விற்பனை….

அதேசமயம், உற்பத்தி நடவடிக்கைகள் குறைவாக உள்ளது, நாடடின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் பருவ மழைக்காலம் நெருங்கி வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு இந்தியாவில் கோவிட்-19க்கு முந்தைய நிலையை எட்டுவதற்கு இன்னும் பல மாதங்கள் எடுக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.