34 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம்!

 

34 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன் படி தினமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு போடப்பட்டிருந்ததால் போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தன்.

34 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம்!

அதனால் சாலை போக்குவரத்து பெருமளவு குறைந்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லும் பழக்கத்திற்கு மக்கள் மாறினர். இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு குறைந்த அளவிலான வாகனங்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுமார் 34 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருக்கிறது. அதன் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.53 காசுகள் அதிகமாகி ரூ.75.54க்கும், டீசல் 52 காசுகள் அதிகமாகி ரூ.68.22க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.