கலெக்டர் காலில் விழுந்து பெண்கள் கண்ணீர்! தஞ்சையில் பரபரப்பு

 

கலெக்டர் காலில் விழுந்து பெண்கள் கண்ணீர்! தஞ்சையில் பரபரப்பு

திடீரென்று தஞ்சை மாவட்ட ஆட்சியரில் காலில் விழுந்து பெண்கள் கண்ணீர் விட்டதால் பரபரப்பு உண்டானது.

கலெக்டர் காலில் விழுந்து பெண்கள் கண்ணீர்! தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏராளமான பெண்கள் கோரிக்கை மனுக்கள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்பொழுது மக்களுடன் நின்று கண்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். தஞ்சையை அடுத்த நீலகிரி ஊராட்சி கலைஞர் நகரை சேர்ந்த பெண்கள் நீண்ட நாட்களாக வீட்டுமனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. மிகவும் ஏழ்மையில் வாழும் எங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டுமென மனு அளித்தனர். அப்பொழுது திடீரென பெண்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதனர்.

கலெக்டர் காலில் விழுந்து பெண்கள் கண்ணீர்! தஞ்சையில் பரபரப்பு

உடனடியாக காவல்துறை மற்றும் அதிகாரிகள் அந்த பெண்களை தூக்கி விட்டனர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தப் பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து அந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோரிக்கை மனு அளிக்க வந்த பெண்கள் திடீரென மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.