சவுடுமண் கொள்ளையை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

சவுடுமண் கொள்ளையை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

திண்டுக்கல் மாவட்டம்
மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள காளிப்பட்டி செங்குளத்தில் முறைகேடாக சவுடு
மண் அள்ளுவதை தடுக்க கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தலைமையில் அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.

சவுடுமண் கொள்ளையை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு
சவுடுமண் கொள்ளையை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், காளிப்பட்டி குளத்தை தூர்வார ஒரு மீட்டர் ஆழத்திற்கு சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில், தனியார் நிறுவனம் 4 மீட்டர் ஆழத்திற்கு குழிகளை தோண்டி சவுடு மண்ணை அள்ளியுள்ளதாக தெரிவித்தார். மேலும், மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால், விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சவுடுமண் கொள்ளையை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு