இந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி! – மத்திய அரசை நாட பரிந்துரை

 

இந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி! – மத்திய அரசை நாட பரிந்துரை

இந்தியாவின் பெயரை பாரத் என்று பெயர் மாற்றம் செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசை அணுகி கோரிக்கைவிடுக்க நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், இந்தியாவின் பெயரை இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் பாரத் என்று மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்று குறிப்பிடும் இடத்தில் எல்லாம் பாரத் என்று மாற்றம் செய்ய திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பு முறைப்படி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இது போன்ற கோரிக்கை மனுக்களை அனுமதிக்க முடியாது. மனுதாரர் மத்திய அரசை அணுகி கோரிக்கை விடுக்கலாம்” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.