குட்கா விவகாரம்: நோட்டீஸூக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனு!

குட்கா விவகாரம்: நோட்டீஸூக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனு!

சட்டபேரவைக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், உரிமைக்குழுவின் நோட்டீஸுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குட்கா விவகாரம்: நோட்டீஸூக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனு!

கடந்த 2017ம் ஆண்டு திமுகவினர் சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 18 எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குட்கா விவகாரம்: நோட்டீஸூக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனு!

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிமைக்குழு 2ஆவது முறையாக அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் உள்நோக்கத்துடன் கொண்டு வரவில்லை என்றும் தலைமை நீதிபதி தெளிவு படுத்தி இருந்தார். இந்த நிலையில், உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸூக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.