சர்க்கரை ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி மனு

 

சர்க்கரை ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி மனு

ஈரோடு

அந்தியூர் அருகே சர்க்கரை ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் உரிய நிவாரணம் பெற்றுத்தரக் கோரி, வட்டாட்சியரிம் கோரிக்கை மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வேம்பத்தி, ஆப்பக்கூடல், ஒரிச்சேரி, புன்னம் ஆகிய ஊராட்சி பகுதிகளில், சக்தி சர்க்கரை ஆலை கொதிகலனில் பயன்படுத்திய நிலக்கரி சாம்பல் பல ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டுள்ளது. மேலும் சாம்பல் கொட்டப்பட்ட இடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சர்க்கரை ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரி மனு

இதனால், அப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கும், விறகு சேகரிக்கவும் சென்ற 10-க்கும் மேற்பட்டோருக்கு, சாம்பலில் கால்பதிந்ததால் மேல்புற தோல் புண்ணாகி, பல ஆண்டுகளாக வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால், முதியர், சிறுவர் என பலர் நடமாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்க்கரை ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரக் கோரி அந்தியூர் வட்டாட்சியர் மாரிமுத்துவை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். இதனை பெற்றுகொண்ட அவர், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.