நீட் தேர்வை 60 நாட்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி!

நீட் தேர்வை 60 நாட்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி!

நீட் தேர்வை 60 நாட்களுக்கு தள்ளிவைக்க உத்தரவிடக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வுகள் வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளன. தேர்வு மையங்கள் பட்டியலை தேசிய

நீட் தேர்வை 60 நாட்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி!

தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை ஒத்தி வைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி

நீட் தேர்வை 60 நாட்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி!

செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் காரணம் காட்டி இந்த 60 நாள் ஒத்திவைப்பு கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.