10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய மனு தள்ளுபடி! – உயர் நீதிமன்றம் அதிரடி

 

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய மனு தள்ளுபடி! – உயர் நீதிமன்றம் அதிரடி

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்துவது சரியாக இருக்காது. மேலும், மாணவர்களுக்கு குறைந்தது 15 நாட்கள் வகுப்பறை பாடப் பயிற்சி அளித்த பிறகே தேர்வுகள் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், “10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்களின் நலன் கருதியே 10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
அரசு தேர்வுகள் துறையில் கொரோனா பரவி வரும் நிலையில், 10ம் வகுப்புத் தேர்வு பற்றிய பீதி பொது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.