‘முருகனை தமிழ் கடவுளாக அறிவிக்க கோரி மனு’: தள்ளுபடி செய்த கோர்ட்!

 

‘முருகனை தமிழ் கடவுளாக அறிவிக்க கோரி மனு’: தள்ளுபடி செய்த கோர்ட்!

தமிழ் கடவுளாக முருகப்பெருமானை அறிவிக்கக் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆங்காங்கே அரசியல் கட்சிகள் கையில் முருகப்பெருமானின் வேல் பிடித்திருக்கிறார்கள். பாஜகவின் வேல் யாத்திரையில் தொடங்கிய இந்த வேல் பிடிப்பு தற்போது மு.க ஸ்டாலின் வரை சென்றிருக்கிறது. அண்மையில் பேசிய சரத்குமார் கூட, தான் 10 வருடமாக கையில் சிறிய வேல் ஒன்று வைத்திருப்பதாக கூட கூறியிருந்தார். இது ஒரு புறமிருக்க மறுபுறம் இந்து அமைப்புகள் சில, தமிழ்க் கடவுள் முருகன் தான் என கூறி வருகின்றன.

‘முருகனை தமிழ் கடவுளாக அறிவிக்க கோரி மனு’: தள்ளுபடி செய்த கோர்ட்!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன், முருகனை தனித்து பார்க்க எப்படி முடியும்?. ஒரே பெற்றோருக்கு பிறந்த இருவரில் முருகன் தமிழ் கடவுள்? விநாயகர் ஹிந்தி கடவுளா? என காட்டமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழ் வெளியிடக் கோரி திருமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவில், தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் முருகனை தமிழ் கடவுள் ஆக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் திருமுருகன்.

‘முருகனை தமிழ் கடவுளாக அறிவிக்க கோரி மனு’: தள்ளுபடி செய்த கோர்ட்!

மனுவை விசாரித்த நீதிபதிகள், மத சார்பற்ற மாநிலத்தில் இது போல அறிவிப்பது மதசார்பற்ற தன்மையை பாதிக்கும் என்றும் தமிழகத்தில் பல மொழி, மதம், நம்பிக்கை உள்ள மக்கள் வசித்து வருகின்றனர் என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும், திருமுருகன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.