இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு: 2 வாரங்களில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு: 2 வாரங்களில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு: 2 வாரங்களில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதனிடையே பொறியியல், தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகள் இறுதித் தேர்வை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் சிறப்பு முகாமாக மாறியுள்ள நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு: 2 வாரங்களில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில் கல்லூரி இறுதி பருவத் தேர்வு ரத்து செய்யக் கோருவது பற்றி யுஜிசி, மத்திய- மாநில அரசுகள் 2 வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.