“பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு” : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!

“பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு” : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!

பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

“பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு” : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த மாதம் பத்தாம் தேதி 30 நாட்கள் பரோலில் வந்தார். அதன்படி சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டவர், ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று மற்றும் நரம்பியல் பிரச்சினை இருப்பதால் அவர் தொடர்ந்து கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு வருகிறார். இதனால் பேரறிவாளன் சிகிச்சைக்காக மீண்டும் ஒரு மாத காலம் பரோல் வழங்க அவரது தாயார் அற்புதம்மாள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பேரறிவாளனுக்கு இரண்டு வாரங்களுக்கு பரோலை அளித்தது.

“பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு” : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!

அதே சமயம் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது அவரது சிகிச்சைக்காக ஒரு வார காலம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி உச்சநீதிமன்றத்தில் அவரது தாயார் அற்புதம்மாள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது.