நியாய விலைக்கடையை, சொசைட்டியாக மாற்ற எதிர்ப்பு; ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் மனு

 

நியாய விலைக்கடையை, சொசைட்டியாக மாற்ற எதிர்ப்பு; ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் மனு

கோவை

கோவையில் சொசைட்டியாக மாற்றிய நியாய விலைக்கடையை, மலைவாழ் மக்களுக்கு வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள 18 மலைக்கிராமங்களில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பெண்கள் இணைந்து தர்சனா பெண்கள் சுய உதவிக்குழு என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக நியாயவிலைக் கடையை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த சிலர், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி துணையோடு, அதனை சொசைட்டியாக மாற்றி, அரசு ஆணை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நியாய விலைக்கடையை, சொசைட்டியாக மாற்ற எதிர்ப்பு; ஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் மனு

இதனால், அதிர்ச்சியடைந்த மலைவாழ் மக்கள், நேற்று சொசைட்டியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சொசைட்டியை மலைவாழ் மக்கள் நடத்த அனுமதிக்க கோரி 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பெண்கள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, மலைவாழ் மக்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க இந்த சொசைட்டி பேருதவியாக இருக்கும் என எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவித்தார்.