வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் அரசு அலுவலகங்களில் மனு அளிப்பு

வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் அரசு அலுவலகங்களில் மனு அளிப்பு

வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தஞ்சை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில், பாமக சார்பில் அரசு அலுவலகங்களில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் அரசு அலுவலகங்களில் மனு அளிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் துணைத் தலைவர் பொன்னுசாமி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சுமார் 2 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்ற கோரிக்கை மனுவை, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமாரிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மகளிரணி தலைவர் நிர்மலா ராஜா, துணை அமைப்பு செயலாளர் குட்டிமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் அரசு அலுவலகங்களில் மனு அளிப்பு

இதேபோல், தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக, பாபநாசம் பேருந்து நிலையத்தில் இருந்து பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் கரும்புகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.