ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

 

ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி டன் கணக்கில் பதுக்கப்படுவதும் கடத்தப்படுவதும் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. அண்மையில், விருதுநகர் மாவட்டத்தில் தனியார் குடோனில் கால்நடைகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, மதுரை அருகே ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் அரிசியும் தூத்துக்குடி அருகே வாகனத்தில் கடத்தப்பட்ட 9 டன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

உணவுக்கு திண்டாடும் ஏழை மக்களுக்கு உதவும் பொருட்டு, அரசு அளிக்கும் இலவச ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்க பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இதற்கு ரேஷன் கடை ஊழியர்களும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில், ரேஷன் கடை உணவுப்பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க கண்காணிப்பு தேவை படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.