3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கு- அரசு பதில் அளிக்க உத்தரவு

3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கு- அரசு பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த ஊரடங்கால் பல தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமலும் வருமானமில்லாமலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவ தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வீட்டு வாடகை, இ.எம்.ஐ உள்ளிட்ட உள்ளிட்ட மாத செலவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கு- அரசு பதில் அளிக்க உத்தரவு

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் 3 மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது என்று என்று அரசாணை பிறப்பிக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 3 மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிப்பது குறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.