ஹத்ராஸ் விவகாரம்; சிபிஐ விசாரணைக்கோரி உ.பி அரசு மனுத்தாக்கல்!

 

ஹத்ராஸ் விவகாரம்; சிபிஐ விசாரணைக்கோரி உ.பி அரசு மனுத்தாக்கல்!

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணைக் கோரி உ.பி அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த மாதம் உ.பி மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண், 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் நாக்கு அறுக்கப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு 2 வாரத்துக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், அண்மையில் அவர் உயிரிழந்தார்.

ஹத்ராஸ் விவகாரம்; சிபிஐ விசாரணைக்கோரி உ.பி அரசு மனுத்தாக்கல்!

இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததால், பெற்றோர்களின் சம்மதமின்றி காவலர்களே அந்த பெண்ணின் உடலை தகனம் செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என போராட்டங்கள் வெடித்தன. மேலும், இத்தகைய சம்பவங்கள் உ.பியில் தொடருவதால் அரசு பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

ஹத்ராஸ் விவகாரம்; சிபிஐ விசாரணைக்கோரி உ.பி அரசு மனுத்தாக்கல்!

இந்த நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், இச்சம்பவத்தை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.