விளம்பரத்தால் வந்த வினை! கைது செய்யப்படுவார்களா விராட் கோலி, தமன்னா?

 

விளம்பரத்தால் வந்த வினை! கைது செய்யப்படுவார்களா விராட் கோலி, தமன்னா?

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆன்லைன் சூதாட்டங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப் படுவதாக தெரிவித்துள்ள அவர், கடந்த வாரம் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரத்தால் வந்த வினை! கைது செய்யப்படுவார்களா விராட் கோலி, தமன்னா?

இதனையடுத்து, மேலும், ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டபட்டதையடுத்து, உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டங்களையும் அதேபோல் தடை செய்ய வேண்டும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.