‘தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரியானது’.. விநாயகர் சதுர்த்தி தடையை நீக்க மறுப்பு!

 

‘தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரியானது’.. விநாயகர் சதுர்த்தி தடையை நீக்க மறுப்பு!

தமிழகத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கவில்லை என்றால், தடையை மீறி தமிழ்நாடு முழுவதும் 1.5 லட்சம் சிலையை நிறுவி வழிபடுவோம் என இந்து முன்னணி நிர்வாகி சுப்பிரமணியம் கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தடையை மீறி சிலை வைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரியானது’.. விநாயகர் சதுர்த்தி தடையை நீக்க மறுப்பு!

அதே போல, மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு விநாயகர் சிலைக்கு அனுமதி வழங்க முடியுமா என தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா சூழலில் தடுப்பு நடவடிக்கை குறித்த அரசின் உத்தரவில் தலையிட முடியாது என்றும் அரசின் முடிவே சரியானது என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், மத வழிபாடு, மத உணர்வு தொடர்பான முடிவுகளை தொற்று சூழலை கருத்தில் கொண்டே எடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், விநாயகர் சிலையை நிறுவி வழிபட தடை விதித்த அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.