ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

 

ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் வசதி இல்லாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மனவர்களுக்கு இண்டர்நெட் வசதி கிடைக்காத சூழலும் நிலவி வருகிறது.

ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
e-learning concept. Online classes.

இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க தடை கோரி உயர்நீதிமன்றத்தில் சரண்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், முறையான டிஜிட்டல் கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சவால்கள், இடையூறுகள் இருப்பதால் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.