பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார் : மீண்டும் கேள்விக்குறியாகும் வனிதாவின் திருமண வாழ்க்கை!

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

நடிகர் விஜய் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திர லேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார்.

இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சண்டைக்கு பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார். தற்போது வனிதா தனது இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார். அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

நேற்று நடிகை வனிதா இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது.


இந்நிலையில் பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், ‘தமக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துள்ளார். நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். தன்னை முறையாக விவாகரத்து செய்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால் அதை பின்பற்றாமல் தற்போது வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்’ என்று அந்த புகாரில் எலிசபெத் ஹெலன் கூறியுள்ளார். இதனால் வனிதாவின் திருமண வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...