பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா காலமானார்!

 

பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா காலமானார்!

சென்னை

தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்சின் மனைவி ஜெசிந்தா உடல்நல குறைவால் இன்று காலமானார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ். இவரது மனைவி ஜெசிந்தா. இவர்களுக்கு நவீன் மற்றும் அனன்சியா என்ற இரு குழந்தைள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெசிந்தா இன்று சென்னையில் உயிரிழந்தார்.

பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா காலமானார்!

இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 44 ஆண்டு காலம் தன்னுடன் இல்லறம் நடத்தி, தனக்கும் குழந்தைகளுக்கும் ஒளி விளக்காக இருந்த, அருமை மனைவி இறைவனடி சேர்ந்ததாக தெரிவித்து உள்ளார். மேலும், அவரது இறுதி சடங்குகள் சென்னை அண்ணாநகரில் உள்ள புனித லூக்கா ஆலயத்தில் நாளை மதியம் 12 மணி அளவில் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, ஜெசிந்தாவின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ஜெசிந்தாவின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, தமிழக காங்கிரஸ் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதாக கூறியுளளார்.