ஊரடங்கில் காடுகளை தனியாருக்கு தாரை வார்த்த மத்திய அரசு!

 

ஊரடங்கில் காடுகளை தனியாருக்கு தாரை வார்த்த மத்திய அரசு!

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தேசிய வனவிலங்கு வாரியத்தின் (என்.பி.டபிள்யூ.எல்) நிலைக்குழு கடந்த மாதம் 7 ம் தேதி அசாமிலுள்ள ரிசர்வ் வனத்திலிருந்து இருந்து 98.59 ஹெக்டேர் நிலத்தை திறந்தவெளி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. (என்.இ.சி.எல்), கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் விற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த பகுதி யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும். இதேபோல் கிழக்கு அஸ்ஸாமின் சிவசாகர், திப்ருகர் மற்றும் டின்சுகியா மாவட்டங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விற்றதாக கூறப்படுகிறது. வனவிலங்கு சரணாலயம் என்பது துணை வெப்பமண்டல மழைக்காடாகும். இது அமேசானுடன் ஒப்பிடப்படுகிறது. காடுகளை தனியாருக்கு விற்றது தொடர்பான செய்தி தனியார் நாளிதழில் இன்று வெளியாகியிருந்தது.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் பொது ரகசியமாக உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த 30 அருமையான காடுகளை தனியாருக்கு தாரை வார்திருக்கிறது மத்திய அரசு!(தி ஹிந்து 24/5/20).கேட்பாரில்லை?” எனக் குறிப்பிட்டுள்ளார்.