சண்டீகரில் பட்டாசு வெடிக்க தடை போட்டதால் செல்ல பிராணி உரிமையாளர்கள் ஹேப்பி…

சண்டீகரில் பட்டாசு வெடிக்க தடை போட்டதால் செல்ல பிராணி உரிமையாளர்கள் ஹேப்பி…

சண்டீகரில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதித்ததால் செல்ல பிராணி உரிமையாளர்கள் சந்தோஷம் அடைந்தனர்.

அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் கோவிட்-19 பரவல் ஆகியவற்றை காரணம் காட்டி ராஜஸ்தான், சண்டீகர் உள்பட பல்வேறு மாநிலங்கள் தீபாவளி காலத்தில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை போட்டன. மேலும் பல மாநிலங்கள் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்தன. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் மக்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி சத்தமில்லாத தீபாவளியாக அமைந்தது.

சண்டீகரில் பட்டாசு வெடிக்க தடை போட்டதால் செல்ல பிராணி உரிமையாளர்கள் ஹேப்பி…
மனு துபே

சண்டீகரில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதித்த யூனியன் பிரதேச நிர்வாகத்தை செல்ல பிராணிகள் உரிமையாளர்கள் பாராட்டியுள்ளனர். சண்டீகரை சேர்ந்த மனு துபே தனது வீட்டில் நாய் வளர்க்கிறார். பட்டாசு வெடிக்க தடை விதித்தது குறிதத அவர் கூறுகையில், இது ஒரு நல்ல முடிவு. பட்டாசுகளின் சத்தத்தால் நாய்கள் உண்மையில் பாதிக்கப்படுகின்றன.

சண்டீகரில் பட்டாசு வெடிக்க தடை போட்டதால் செல்ல பிராணி உரிமையாளர்கள் ஹேப்பி…
பட்டாசு வெடிக்க தடை

அது உண்மையில் அவற்றுக்கு வேதனையானது. சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் அவை தொடர்ந்து குரைத்து கொண்டே இருக்கும். இது விலங்களுக்கு தொந்தரவு மற்றும் அண்டை வீட்டார்களுக்கும் தொந்தரவு. இந்த தடை ஒரு முழுமையான தேவையாக இருந்தது. இந்த தடை மூத்த குடிமக்களுக்கும், விலங்களுக்கும் மிகவும் நல்லது. பட்டாசு தடையால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார்.